இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் இருந்து 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஹரியானாவை சேர்ந்த பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர்.
இவர்களுக்கு, டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவர் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஊடகங்களில் பிரசாரம் செய்வது; நமது ராணுவத்தின் தகவல்கள், முக்கிய இடங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அளிப்பது போன்ற உளவு வேலைகளை பார்த்துள்ளனர்.